சேலம் மத்திய சிறைக்குள் ஞாயிற்றுக்கிழமை கஞ்சா பொட்டலங்கள் வீசப்பட்டது குறித்து அஸ்தம்பட்டி காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
சேலம் மத்திய சிறைக்குள் கடந்த சில வாரங்களில் பல முறை கஞ்சா பொட்டலங்கள் வீசப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை இரவு சிறையின் பின்பகுதியில் உள்ள உடையார் காடு பகுதியில் இருந்து மீண்டும் 3 கஞ்சா பொட்டலங்கள் வீசப்பட்டுள்ளன. இதை திங்கள்கிழமை காலை கண்ட சிறைக் காவலர்கள் இது குறித்து சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த 3 பொட்டலங்களிலும் சேர்த்து சுமார் 50 கிராம் கஞ்சா இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஜெயிலர் கிருஷ்ணன், அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதற்கிடையே திங்கள்கிழமை சிறையில் இருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட ஒரு கைதியிடம் சோதனை நடத்தியதில் கஞ்சா பொட்டலம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறைக் காவலர்கள் விசாரணை நடத்துகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

