திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

சிதம்பரத்தில் ரூ.5-க்கு சுவையான காபி விற்பனை செய்யும் முதியவர்!

கடலூர் குமாரபேட்டையைச் சேர்ந்த சி.கே.ஜெயராமன் (65). இவரது பூர்வீகம் சிதம்பரம் நகரமாகும். இவரது இரு மகள்களுக்கு திருமணமானதால் கடலூர் குமாரபேட்டையில் மகள் வீட்டில் மனைவி ஜே.பானுமதியுடன்

News image
Updated On :8 ஜூன் 2013, 1:44 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் கடலூரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் ரூ.5-க்கு சுவையான நரசுஸ் காபி விற்பனை செய்கிறார்.  பால், ஜீனி விலை உயர்ந்தும் ரூ.5க்கு தரமான நரசுஸ் காபி விற்பனை செய்வதால் இவரது கடையில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

கடலூர் குமாரபேட்டையைச் சேர்ந்த சி.கே.ஜெயராமன் (65). இவரது பூர்வீகம் சிதம்பரம் நகரமாகும். இவரது இரு மகள்களுக்கு திருமணமானதால் கடலூர் குமாரபேட்டையில் மகள் வீட்டில் மனைவி ஜே.பானுமதியுடன் வசித்து வருகிறார். இருப்பினும் சிதம்பரம் ரயில்வே பீடர் ரோட்டில் தினமும் பஸ்ஸில் வந்து காபி கடையை நடத்திவிட்டு இரவு கடலூர் சென்று வருகிறார். இவரது கடையில் சுவையான நரசுஸ் காபியை ரூ.5 க்கு விற்பனை செய்கிறார் இதனால் காலை, மாலை இருவேளையும் இவரது கடையில் அரசியல்வாதிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் என மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இதுகுறித்து சி.கே.ஜெயராமன் தெரிவித்தது: தினமும் காலை 7 மணி முதல் 12 மணி வரையும், மாலை 3 மணி முதல் 6 மணி வரை காபி விற்பனை செய்கிறேன். அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கக ஊழியர்கள், ஆயுள் காப்பீட்டுக்கழக ஊழியர்கள், பொதுப்பணித்துறை ஊழியர்கள், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் எனது கடையில் காபி சாப்பிடுகின்றனர். நாள் ஒன்றுக்கு 15 லிட்டம் பால் வாங்கி காபி விற்பனை செய்கிறேன். குறைந்தது சுமார் 500 காபிக்கு மேல் விற்பனை செய்வதால் ரூ.5 விலை கட்டுபடியாகிறது. லாபமும் கிடைக்கிறது. நான் அதிக லாபம் எதிர்பார்க்காமல் குறைந்த விலையில், நிறைந்த தரத்தில் விற்பனை செய்வதால் கூட்டம் அதிகமாக வருகிறது என்கிறார் சி.கே.ஜெயராமன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.