யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சேலத்தில் லஞ்சம் பெற்ற சிறப்பு ஆய்வாளர் கைது

சேலத்தில், குற்றவாளிகளை காவல்நிலைய பிணையில் விடுவதற்கு லஞ்சம் கேட்ட காவல்நிலைய சிறப்பு ஆய்வாளர் இன்று கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :10 ஜூன் 2013, 10:57 am

தங்கராஜா

சேலத்தில், குற்றவாளிகளை காவல்நிலைய பிணையில் விடுவதற்கு லஞ்சம் கேட்ட காவல்நிலைய சிறப்பு ஆய்வாளர் இன்று கைது செய்யப்பட்டார்.

சேலம் இரும்பாலை காவல்நிலைய சிறப்பு இன்ஸ்பெக்டராக இருப்பவர்  கே. மணி.

கடந்த மாதம் 27ம் தேதி சித்தர் கோயில் சாலையில் இரண்டு இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து நேரிட்டது.  இந்த விபத்து குறித்து விபத்தை ஏற்படுத்திய சுவாமிநாதபுரத்தைச் சேர்ந்த மோகன், அருள்குமார் இருவர் மீதும் 29ம் தேதி எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், இவர்களை கைது செய்து, காவல்நிலைய பிணையில் விடுதலை செய்ய, சிறப்பு ஆய்வாளர் மணி ரூ.5 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத இருவரும், சேலம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சந்திரமௌலிக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறையினர் அளித்த ரூ.3 ஆயிரம் பணத்தை, இருவரும், மணியிடம் கொடுத்தனர். அப்போது அங்கே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், மணியைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.