பொன்னேரி அடுத்துள்ள ஆண்டார்குப்பம் கிராமத்தில் வசித்து வரும் ராஜேந்திரனின் மகள் சுமதி(25). எம்.ஏ வரை படித்துள்ள சுமதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் நெருங்கிய உறவினருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த 24-ம் தேதி கோயிலுக்கு செல்வதாக செல்வதாக கூறிவிட்டு சென்ற சுமதி வீடு திரும்பவில்லை. சுமதியை அவரது நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் வீடுகளில் அவரது பெற்றொர் தேடி பார்த்தும் எங்கும் அவர் இல்லை. இதையடுத்து சுமதி காணமால் போனதாக அவரது தந்தை ராஜேந்திரன் பொன்னேரி போலீஸில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து சுமதியை தேடி வந்தார். எண்ணூர் கடலை ஒட்டி ஓடும் பக்கிங்காம் கால்வாயில் இளம்பெண் சடலம் ஒன்று கிடப்பதாக மீஞ்சூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மீஞ்சூர் போலீஸார் இளம்பெண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.