புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

சிதம்பரம் பாதாள சாக்கடை திட்டம் பாழ்: புதிய பாதாள சாக்கடை விரிவாக்க திட்டம் செயல்படுத்தப்படுமா?

சிதம்பரம் நகரில் உள்ள பாதாள சாக்கடை திட்டம் பாழடைந்ததால், தினமும் தேரோடும் வீதிகளிலும், முக்கிய சாலைகளிலும் பாதாள சாக்கடை நீர் உடைப்பெடுத்து சுகாதார சீர்கேட்டை விளைவித்து வருகிறது.

News image
Updated On :14 ஜூன் 2013, 10:12 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நகரில் உள்ள பாதாள சாக்கடை திட்டம் பாழடைந்ததால், தினமும் தேரோடும் வீதிகளிலும், முக்கிய சாலைகளிலும் பாதாள சாக்கடை நீர் உடைப்பெடுத்து சுகாதார சீர்கேட்டை விளைவித்து வருகிறது. அறிவிக்கப்பட்ட புதிய பாதாள சாக்கடை விரிவாக்க திட்டமும் ரத்து செய்யப்பட்டதால், மீண்டும் புதிய விரிவாக்கத் திட்டம் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையாகும்.

சிதம்பரம் நகராட்சியின் மொத்த பரப்பளவு 4.80 சதுர கிலோ மீட்டராகும். புகழ்பெற்ற ஸ்ரீநடராஜர் கோயில் உள்ள நகரமாக திகழ்கிறது. மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. சுமார் 62168 பேர் நகராட்சி எல்லைக்குள் வசித்து வருகின்றனர். சிதம்பரம் நகராட்சியில் 1969-ல் முதலில் பாதாள சாக்கடை திட்டம் அமுலில் உள்ளது. தற்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதாள சாக்கடை இணைப்புகள் உள்ளன.

தற்போது 40 ஆண்டுகளை கடந்த இந்த திட்டம் பாழடைந்து நகரில் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடைகளில் உடைப்பு ஏற்பட்டு குடிநீருடன் சாக்கடை நீர் கலக்கிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் உடைப்புகள் ஏற்பட்டு சாலையில் பாதாள சாக்கடை நீர் தேங்கி நின்று சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனை கருத்தியில் கொண்டு 2008-ம் ஆண்டு திமுக ஆட்சியில் ரூ.44 கோடி செலவில் புதிய பாதாள சாக்கடை விரிவாக்க திட்டம் அனுமதி பெறப்பட்டு தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் மூலம் ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டது. என்ன காரணமோ தெரியவில்லை பின்னர் 2010-ம் ஆண்டு இந்ந திட்டம் ரத்து செய்யப்பட்டது. தற்போது மேற்படி திட்டத்தினை மாற்றி புதுப்பிக்க விரிவான திட்ட அறிக்கை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தயாரித்து வருகிறது.

தற்போது சிதம்பரம் நகரில் குறிப்பாக தெற்குவீதி, கீழரதவீதி, எஸ்.பி.கோயில்தெரு, வேணுகோபால்பிள்ளைதெரு உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை உடைப்பெடுத்து சாலையில் ஓடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தி வருகிறது. நகரில் பாதாள சாக்கடை நீர் உடைப்பெடுத்து ஓடுவதும், அதனை நகராட்சி நிர்வாகம் சீர் செய்வதுமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் இதற்கு நிர்ந்திர தீர்வு காணப்படவில்லை. என மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் புதிய பாதாள சாக்கடை விரிவாக்க திட்டத்தை செம்மையான முறையில் செயல்படுத்தி புதிய திட்ட அறிக்கையை தயாரித்து விரைந்து அத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்தால் சிதம்பரம் நகர மக்களும், சுற்றுலாப் பயணிகளும் சுகாதார சீர்கேட்டிலிருந்து காப்பாற்றப்படுவார்கள் என சமூக ஆர்வலரகள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.