புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

சிதம்பரத்தில் தனியார் பள்ளி வாகனத்தை சிறைபிடித்த பெற்றோர்கள்!

சிதம்பரத்தில் அதிகமான மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளி வாகனத்தை பெற்றோர்கள் மறித்து சிறைபிடித்தனர்.

News image
Updated On :20 ஜூன் 2013, 11:51 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் அதிகமான மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளி வாகனத்தை பெற்றோர்கள் மறித்து சிறைபிடித்தனர்.

சிதம்பரம் அருகே துணிஞ்சிரமேட்டில் அதீனா குளோபல் பள்ளி உள்ளது. இந்த பள்ளி வேனில் அதிகமான மாணவர்களை ஏற்றிச் செல்வது குறித்து பெற்றோர்கள் பல முறை பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். இருப்பினர் 36 இருக்கைகள் கொண்ட வேனில் தினமும் 60 மாணவ, மாணவியர்களை ஏற்றுச் சென்றுள்ளனர். இந்நிலையில் இப்பள்ளி வேன் வழக்கம் போல் அதிகமான மாணவ, மாணவியர்களை ஏற்றிக் கொண்டு சிதம்பரம் நகர சுற்றுப்புற வழியாக வியாழக்கிழமை காலை பள்ளியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது மந்தகரை எனுமிடத்தில் பெற்றோர்கள் கூடுதலாக மாணவர்களை ஏற்றிச் செல்வதை கண்டித்து பள்ளி வேனை வழிமறித்து சிறைபிடித்தனர். தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பெற்றோர்களை சமரசப்படுத்தி பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்து மாணவர்களை அனுப்பி வைத்தனர். புகாரை அடுத்து வட்டார போககுவரத்து துறை மோட்டார் வாகன ஆய்வாளர் ஆர்.ரவிச்சந்திரன் பள்ளி வேனை ஆய்வு செய்து அதிகமான மாணவர்களை ஏற்றிச் செல்லக்கூடாது என எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.