அண்ணாமலைப் பல்கலை நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம்: மாணவர்கள் அவதி
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் நுழைவுத்தேர்வு தேர்வு பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள்


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் நுழைவுத்தேர்வு தேர்வு பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2013-14 கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., பிபிடி., பிஎஸ்சி நர்சிங்., பிஇ., பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை ஆகிய படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு தமிழகம் முழுவதும் அண்ணாமலைநகர், சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி, திருச்சி ஆகிய 7 மையங்களில் நடைபெற்றது. நுழைவுத்தேர்வு ஜூன் 7,8,9 தேதிகளில் நடைபெற்றது. பொறியியல், வேளாண் மற்றும் மருத்துவப்படிப்பிற்கான நுழைவுத்தேர்வு எழுத மொத்தம் 24,587 மாணவ, மாணவியர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் சுமார் 90 முதல் 95 மாணவ, மாணவியர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர்.
நுழைவுத்தேர்வு முடிவுற்று சுமார் 15 தினங்களாகியும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாததால் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பிற்கு கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவியர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக கடலூர், விழுப்புரம், அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயில விரும்பி நுழைவுத்தேர்வு எழுதியுள்ளனர். நுழைவுத்தேர்வு முடிவுகள் இதுவரை வெளியிடப்படாததால் கவுன்சிலிங்கில் தங்களுக்கு கிடைக்கும் கல்லூரிகளில் சேருவதா அல்லது பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அனுமதி சேர்க்கை கிடைத்தால் சேகுவதா என்ற குழப்பத்தில் உள்ளனர். மேலும் கவுன்சிலிங்கில் தேர்வு செய்யப்பட்டு பணம் கட்டிய பிறகு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அனுமதி சேர்க்கை கிடைத்தால், அந்த பணம் திரும்ப கிடைக்கப் பெறுமான என மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக நுழைவுத்தேர்வின் தேர்வு பட்டியலை விரைந்து வெளியிட வேண்டும் என மாணவ, மாணவியர்களின் எதிர்ப்பார்ப்பாகும்.
விண்ணப்பங்கள் வழங்கப்படாததால் மாணவர்கள் அவதி: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்ஏ, எம்பிஏ., எம்எஸ்சி., 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்டப்படிபுகள், எம்எஸ்சி நர்சிங், எம்பிடி., பிஇ., எம்இ., எம்சிஏ, பி.ஃபார்ம், எம்.ஃபார்ம் ஆகிய படிபுகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். விண்ணப்பம் வி்ற்பனை கடைசி தேதியும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய தேதி ஜூலை 5-ம் தேதி என பல்கலைக்கழக நிர்வாகத்தால் விளம்பரம் மற்றும் நோட்டீஸ் போர்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை. விண்ணப்பங்கள் மற்றும் பிராஸ்பெக்டஸ் அச்சடித்து வரவில்லை எனக்கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...