பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஸ்டெர்லைட் ஆலைக்குச் சொந்தமான ரூ.50 கோடி மதிப்பு உற்பத்தி பொருள் கையாடல்: 5 பேர் கைது

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்குச் சொந்தமான ரூ.50 கோடி மதிப்புள்ள உற்பத்திப் பொருள்களைக் கையாடல் செய்து மாற்றியதாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image
Updated On :22 ஜூன் 2013, 10:46 am

இன்பராஜ்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்குச் சொந்தமான ரூ.50 கோடி மதிப்புள்ள உற்பத்திப் பொருள்களைக் கையாடல் செய்து மாற்றியதாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து க்ளைம் பவுடன் என்ற மூலப் பொருள் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கொழும்பு வழியாக துபாய்க்குச் செல்ல வேண்டும். இந்நிலையில் இதனை சோதனை செய்தபோது  அது போலியானது என்று தெரியவந்தது. இதை அடுத்து விசாரணை மேற்கொண்டதில், ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரியும் ஒருவரும் வேறு சில நபர்களும் நல்ல பொருளை பதுக்கி வைத்து போலியை அனுப்பியது தெரியவந்தது. இதை அடுத்து இதில் ஈடுபட்ட 5 பேரை போலீஸார் கைது செய்தனர். .ஒருவர் தேடப்பட்டு வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.