ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழு 3-வது கட்ட ஆய்வு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருட்டாலையில் கடந்த மார்ச் மாதம் நச்சுவாயு வெளியானதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மார்ச் 30-ம் தேதி ஆலையை மூட உத்தரவிட்டது


தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருட்டாலையில் நிபுணர்கள் குழுவினர் மூன்றாவது கட்டமாக இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருட்டாலையில் கடந்த மார்ச் மாதம் நச்சுவாயு வெளியானதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மார்ச் 30-ம் தேதி ஆலையை மூட உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது விசாரணை மேற்கொண்ட சென்னையில் உள்ள பசுமை தீர்ப்பாய நீதிபதிகள் மேல் விசாரணையை தில்லியில் உளள தேசிய பசுயை தீர்ப்பாயம் விசாரிக்கும் என அறிவித்தனர். அதன்படி, விசாரணை நடத்திய தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதிகள் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து ஆலை செயல்படலாம் என அறிவித்தனர்.மேலும், ஸ்டெர்லைட் ஆலையை நிபுணர்கள் குழுவினர் மூன்று கட்டமாக ஆய்வு செய்து ஜூலை மாதம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இதையெடுத்து, சென்னை ஐஐடி பேராசிரியர் சாய் தலைமையிலானகுழுவினர் ஜூன் 7-ம் தேதி முதல்கட்டமாகவும், ஜூன் 16-ம் தேதி இரண்டாவது கட்டமாகவும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில், மூன்றாவது மற்றும் இறுதிகட்டமாக ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர்கள் குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். சென்னை ஐஐடி பேராசியர் சாய், மற்றொரு பேராசிரியர் விஜி பிலிப், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் கம்யோத்ரா, தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் பாலாஜி, துணை செயற்பொறியாளர் முருகன், காற்று பாதுகாப்பு மைய ஆராய்ச்சியாளர் தனசேகர் ஆகியோர் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். காலை 9.30 மணிக்கு தொடங்கிய ஆய்வு மாலை 5 மணிக்கு முடிவுக்கு வந்தது.ஆலையில் தாமிர உருட்டாலையில் திங்கள்கிழமை உற்பத்தி தொடங்கியதால் அந்த சமயத்தில் வெளியாகும் மாசு குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மட்டும் தூத்துக்குடியில் 5 நாள்கள் தங்கியிருந்து ஆய்வு நடத்துகின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள பகுதி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த ஆய்வு நடைபெறுகிறது. ஆய்வு முடிந்ததும் ஜூலை மாதம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபிறகு ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி முழுமையாகத் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...