சேலம் அருகே மனைவியைக் கொன்று கணவன் தற்கொலை
சேலம் மாவட்டம் சுக்கம்பட்டியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி பெருமாள் (38). இவரது மனைவி உஷாராணி. இவரும் கட்டடத் தொழிலில் ஈடுபட்டுவந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள். இந்நிலையில்


சேலம் மாவட்டம் சுக்கம்பட்டியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி பெருமாள் (38). இவரது மனைவி உஷாராணி. இவரும் கட்டடத் தொழிலில் ஈடுபட்டுவந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள். இந்நிலையில் இருவரும் தனித்தனியே வெவ்வேறு இடங்களில் கட்டட வேலைகளில் இருந்ததால், மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட பெருமாள் அடிக்கடி கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு தலைதூக்கியுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை 1.30 மணி அளவில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த பெருமாள் தானும் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வீராணம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...