ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

டாக் தொழிற்சாலை ஊழியர்கள் 2-வது நாளாக உண்ணாவிரதம்

தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரத்தில் டாக் தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையில் உரம் தயாரிப்பதற்கு உரிய மூலப்பொருளான அமோனியம் குளோரைடு, சலவைத்தூள் மற்றும் கண்ணாடி

News image
Updated On :29 ஜூன் 2013, 1:38 pm

INBARAJ

தூத்துக்குடியில் அண்மையில் மூடப்பட்ட டாக் தொழிற்சாலையை திறக்க வலியுறுத்தி ஆலை தொழிலாளர்கள் இன்று 2-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரத்தில் டாக் தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையில் உரம் தயாரிப்பதற்கு உரிய மூலப்பொருளான அமோனியம் குளோரைடு, சலவைத்தூள் மற்றும் கண்ணாடி தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருளாக பயன்படும் சோடாஆஷ் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில், பல்வேறு காரணங்களுக்காக தொழிற்சாலையில் கடந்த இரண்டு மாதங்களாக உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதையெடுத்து, தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடந்த 26-ம் தேதி ஆலை நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இதனால், அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் மூடப்பட்ட ஆலையை உடனடியாக திறக்க வேண்டும், ஆலையை அரசு கையகப்படுத்தி நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினர்.

தொழிற்சாலை முன்பு 2-வது நாளாக சனிக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, டாக் தொழிலாளர் யூனியன் தலைவர் துரையரசன் தலைமை வகித்தார். பொதுச் செயலர் துரை முன்னிலை வகித்தார். போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள், சட்டவிரோதமாக ஆலை மூடப்பட்டு இருப்பதாகவும், உடனடியாக ஆலையை திறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.தொடர்ந்து, ஆலையை திறக்க வலியுறுத்தி சிஐடியு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாநில பொதுச் செயலர் ஆர்.ரசல் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.