எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வி.கே.புரத்தில் மூதாட்டியை கட்டி போட்டு நகை பறிப்பு

விக்கிரமசிங்கபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை பட்டப் பகலில் காவல் நிலையம் அருகில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப் போட்டு ரூ.

News image
Updated On :3 மார்ச் 2013, 5:21 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை பட்டப் பகலில் காவல் நிலையம் அருகில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப் போட்டு ரூ. 1 லட்சம் மதிப்புள்ள நகையை பறித்து சென்ற மர்ம மனிதரை போலீஸார் தேடி வருகின்றனர்.

விக்கிரமசிங்கபுரம் பிரதான சாலையை சேர்ந்த ராமையா மனைவி லோகா (70|. ராமையா இறந்து விட்டார். லோகா தனது மகன் சங்கரசுப்பிரமணியனுடன் வசித்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை சங்கரசுப்பிரமணியன் தனது குடும்பத்தினருடன் திருநெல்வேலிக்கு சென்றிருந்தார். வீட்டில் லோகா தனியார் இறந்தார்.

அப்போது லோகா வீட்டிற்கு வந்த மர்ம மனிதர், வீட்டின் தரையை பாலிஸ் போட வந்துள்ளேன் என தெரிவித்துள்ளார். இந்த தகவலை லோகா தனது மகனிடம் தொலைபேசியில் தெரிவிக்க முயன்றுள்ளார். சங்கரசுப்பிரமணியன் தொலைபேசியை எடுக்கவில்லை.

இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட மர்ம மனிதர் லோகாவை மிரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அவர் கை கால்களை கட்டி போட்டு விட்டு அவர் அணிந்திருந்த 4 பவுன் எடையுள்ள தங்கசங்கிலி மற்றும் வளையல்களை மர்ம மனிதன் பறித்து கொண்டு தப்பி விட்டார். இதன் மதிப்பு ரூ. 1 லட்சம்.

காவல் நிலையம் அருகில் பட்டப்பகலில் போக்குவரத்து நிறைந்த பிரதான சாலையில் மூதாட்டியை கட்டிப் போட்டு நகையினை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விக்கிரமசிங்கபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.