யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஸ்ரீவிலி. அருகே மனைவி, மகனை அரிவாளால் வெட்டியவர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேட்டு முள்ளிக்குளத்தைச் சேர்ந்தவர் நல்லம்மாள் (38). இவருக்கும் கணபதி சுந்தரநாச்சியார்புரத்தைச் சேர்ந்த பாலசுந்தரதம் மகன் ராமர் என்பவருக்கும் திருணம் நடைபெற்று 5 பிள்ளைகள் உண்டு. மூத்த மகள் சுரேகா (19), தனியார் பட்டாசு தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது

News image
Updated On :3 மார்ச் 2013, 12:44 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனது மனைவி மற்றும் மகனை அரிவாளால் வெட்டியவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேட்டு முள்ளிக்குளத்தைச் சேர்ந்தவர் நல்லம்மாள் (38). இவருக்கும் கணபதி சுந்தரநாச்சியார்புரத்தைச் சேர்ந்த பாலசுந்தரதம் மகன் ராமர் என்பவருக்கும் திருணம் நடைபெற்று 5 பிள்ளைகள் உண்டு. மூத்த மகள் சுரேகா (19), தனியார் பட்டாசு தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமுற்ற ராமர், தனது மனைவியை நீ பிள்ளையை ஒழுங்காக வளர்க்கவில்லை என்று கூறி தகராறு செய்துள்ளார். இதில் ஏற்பட்ட பிரச்னையை அடுத்து மூன்று ஆண்டுகளாக நல்லம்மாள் மேட்டு முள்ளிக்குளத்தில் பிள்ளைகளுடன் குடியிருந்து வருகிறார்.இந்நிலையில் இன்று நல்லம்மாள் வீட்டிற்கு ராமர் வந்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகாறில் மனைவி நல்லம்மாளை ராமர் அரிவாளால் வெட்டியுள்ளார். தடுக்கச் சென்ற மகன் ரமேஷ் (18) என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.இது குறித்து மல்லி காவல் நிலையத்தில் நல்லம்மாள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராமரை தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.