:பெண்களை ஜாதி பெயரை சொல்லி திட்டிய வழக்கில் வன்கொடுமை சட்டத்தின் கீழ் இளைஞருக்கு 7 மாதம் சிறை தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
கடலூர் அருகே புதுச்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி பானு (27). திருச்சோபுரம் பகுதியில் கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி பானு, கீதா, வசந்தா உள்ளிட்ட 3 பேர் விறகு எடுத்து சென்றனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த குமரவேல்(25). பானுவை ஜாதி பெயரை சொல்லி திட்டியதோடு கத்தியை காட்டி மிரட்டி தங்க செயினை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸார் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கடலூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. இதில் குமரவேலுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 7 மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தராபதி உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதிய மைல்கல்லை எட்டிய சென்னை ஒன் செயலி!

ஈரானில் இருந்து நாடு திரும்பிய 2,300 இந்தியர்கள்! - மத்திய அரசு அறிவிப்பு!

ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?

'16' புதிருக்கான விடையை அவ்வளவு எளிதாக சொல்லிவிடமாட்டேன்! ராகுல்
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

