சேரன்மகாதேவியில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி
சேரன்மகாதேவி எம்.கே.டி. தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளி சுப்பிரமணியன். இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தாராம். மர்ம நபர்கள் சுப்பிரமணியன் வீட்டு பூட்டை உடை


சேரன்மகாதேவி எம்.கே.டி. தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளி சுப்பிரமணியன். இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தாராம். மர்ம நபர்கள் சுப்பிரமணியன் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கு திருட முயற்சி செய்துள்ளனர். வீட்டில் விலை உயர்ந்த தங்கம் உள்ளிட்ட பொருட்கள் எதுவும் இல்லாததால் மர்ம நபர்கள் சென்று விட்டனர்.
சேரன்மகாதேவி அருகே செல்விபுரத்தில் தனியார் கல்லூரி ஊழியர் வீடு, அருகில் மற்றொரு வீட்டுக்கு சென்ற மர்ம நபர்கள் வீட்டில் இருந்த அழைப்பு மணியை தொடர்ந்து அடித்தனராம். சேரன்மகாதேவியில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்த வீடுகளில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து திருடிய சம்பவம், அழைப்பு மணியை அடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...