ஈரோடு நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
ஈரோடு நீதிமன்றத்துக்கு இன்று காலை வந்த வெடிகுண்டு மிரட்டலால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


ஈரோடு நீதிமன்றத்துக்கு இன்று காலை வந்த வெடிகுண்டு மிரட்டலால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு நீதிமன்றத்துக்கு இன்று காலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், ஈரோடு நீதிமன்றத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு மர்ம நபர் கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டார். இதையடுத்து, காவல்நிலையத்துக்கு தகவல் தரப்பட்டு, நீதிமன்றத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. எனினும், வெடிகுண்டுகள் ஏதும் கண்டுபிடிக்கப்படாததால், அது வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இந்த நிலையில், தொலைபேசி அழைப்பு சென்னையில் இருந்து வந்துள்ளதை காவல்துறையினர் கண்டு பிடித்துள்ளனர். தொலைபேசி அழைப்பை செய்தவர்கள் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...