ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கோவை மாநகராட்சிக் கூட்டத்தில் அடிதடி ரகளை

கோவை மநகராட்சிக் கூட்டத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது, உறுப்பினர்களுக்குள் அடிதடி ரகளை ஏற்பட்டது. அதிமுக உறுப்பினர்கள் பெண் உறுப்பினர்களை தாக்கினர்.

News image
Updated On :14 மார்ச் 2013, 6:12 am

வேல்முருகன்

கோவை மநகராட்சிக் கூட்டத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது, உறுப்பினர்களுக்குள் அடிதடி ரகளை ஏற்பட்டது. அதிமுக உறுப்பினர்கள் பெண் உறுப்பினர்களை தாக்கினர்.

கோவை மாமன்ற நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டதும், பட்ஜெட் மீது இன்று மாலை விவாதம் நடைபெறும் என்று  மேயர் அறிவித்தார். இதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து அதிமுக, திமுக உறுப்பினர்கள் இடையே அடிதடி ரகளை ஏற்பட்டது.

மதியம் 3.30 மணிக்கு மேயர் விவாதம் நடத்தப்படும் என்று கூறியதற்கு, திமுக எதிர்க்கட்சித் தலைவர் நந்தகுமார் மேயரிடம் பட்ஜெட்டை படித்துப் பார்க்க நேரம் வேண்டும் என்று கூறினார்.

ஆனால் இதனை ஏற்காத மேயர், அதிமுக உறுப்பினர்கள் தான் மெஜாரிட்டியாக உள்ளோம்.அவர்கள் இன்றே விவாதத்தை வைத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டு, அனைவரும் சாப்பிட போகலாம் என்று கூறினார்.

அதற்கு, திமுக உறுப்பினர் மீனா லோகநாதன், நாங்கள் சாப்பிட வரவில்லை, விவாதம் நடத்த தான் வந்துள்ளோம் என்று கூறி, மேயரை வெளியே வர விடாமல் திமுக உறுப்பினர்கள் அனைவரும் அவரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, மீனா லோகநாதன் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த காயத்ரி வெங்கடாச்சலம் ஆகியோரை அதிமுக உறுப்பினர்கள் தாக்கினர்.

இதையடுத்து, என்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இங்கிருந்து போக மாட்டேன் என்று இரு பெண் உறுப்பினர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.