கோவை மாநகராட்சிக் கூட்டத்தில் ரகளை : அதிமுக பெண் உறுப்பினர்கள் மருத்துவமனையில் அனுமதி
கோவை மநகராட்சிக் கூட்டத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது, உறுப்பினர்களுக்குள் அடிதடி ரகளை ஏற்பட்டது. அதிமுக உறுப்பினர்கள் பெண் உறுப்பினர்களை தாக்கினர்.


கோவை மநகராட்சிக் கூட்டத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது, உறுப்பினர்களுக்குள் அடிதடி ரகளை ஏற்பட்டது. அதிமுக உறுப்பினர்கள் பெண் உறுப்பினர்களை தாக்கினர்.
கோவை மாமன்ற நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டதும், பட்ஜெட் மீது இன்று மாலை விவாதம் நடைபெறும் என்று மேயர் அறிவித்தார். இதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து அதிமுக, திமுக உறுப்பினர்கள் இடையே அடிதடி ரகளை ஏற்பட்டது.
மதியம் 3.30 மணிக்கு மேயர் விவாதம் நடத்தப்படும் என்று கூறியதற்கு, திமுக எதிர்க்கட்சித் தலைவர் நந்தகுமார் மேயரிடம் பட்ஜெட்டை படித்துப் பார்க்க நேரம் வேண்டும் என்று கூறினார்.
ஆனால் இதனை ஏற்காத மேயர், அதிமுக உறுப்பினர்கள் தான் மெஜாரிட்டியாக உள்ளோம்.அவர்கள் இன்றே விவாதத்தை வைத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டு, அனைவரும் சாப்பிட போகலாம் என்று கூறினார்.
அதற்கு, திமுக உறுப்பினர் மீனா லோகநாதன், நாங்கள் சாப்பிட வரவில்லை, விவாதம் நடத்த தான் வந்துள்ளோம் என்று கூறி, மேயரை வெளியே வர விடாமல் திமுக உறுப்பினர்கள் அனைவரும் அவரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, மீனா லோகநாதன் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த காயத்ரி வெங்கடாச்சலம் ஆகியோரை அதிமுக உறுப்பினர்கள் தாக்கினர். இதையடுத்து, தங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இங்கிருந்து போக மாட்டேன் என்று இரு பெண் உறுப்பினர்களும் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், திமுக கவுன்சிலர் தங்களை தாக்கியதாகவும், அதனால் தாங்கள் காயமடைந்ததாகவும் கூறி அதிமுக பெண் கவுன்சிலர்கள் அன்னம்மாள் மற்றும் கௌரி இருவரும், கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...