அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகர் குண்டு வீச்சு சம்பவம்: 4 பேர் நீதிமன்றத்தில் சரண்

விருதுநகரில் கச்சேரி சாலையில் கிறிஸ்துவ ஆலயம் முன்புறம் காவல் நிலையத்திற்கு கையொழுத்திட வந்தவர்கள் மீது வெடிகுண்டு வீசிய சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் சென்னை மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரண் அடைந்தனர்.

Updated On :15 மார்ச் 2013, 3:43 pm

விருதுநகரில் கச்சேரி சாலையில் கிறிஸ்துவ ஆலயம் முன்புறம் காவல் நிலையத்திற்கு கையொழுத்திட வந்தவர்கள் மீது வெடிகுண்டு வீசிய சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் சென்னை மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரண் அடைந்தனர்.

இது தொடர்பாக போலீஸார் தரப்பில் கூறியதாவது: விருதுநகர் மேற்கு ரத வீதியைச் சேர்ந்தவர் ஐயப்பன், அவரது உறவினர்களான சிவா, சிபி சக்கரவர்த்தி ஆகிய 3 பேரும் திமுக இளைஞரணி நிர்வாகியாக இருந்த மதிவாணன் என்பவரை கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு இந்திரா நகர் அருகில் திடீரென காரில் கடத்தினார்கள். அதையடுத்து, அவரிடம் பணம் கேட்டு ஆயுதத்தால் மிரட்டிய நிலையில் தப்பியோடினார். இது தொடர்பாக மேற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக நாள்தோறும் காவல் நிலையத்தில் கையொழுத்திட வேண்டும். அதற்காக வியாழக்கிழமை வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போது, திடீரென சுமோ காரில் வந்த கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசி விட்டு தப்பியோடினார்கள். இதில், வாகனம் மட்டும் சேதமடைந்த நிலையில் அதிஷ்டவசமாக ஐயப்பன் உள்ளிட்ட 3 பேரும் உயிர் தப்பினார்கள்.

இது தொடர்பாக மேற்கு காவல் நிலைய போலீஸாரிடம் ஐயப்பன், கடந்த 29.10.2012 அன்று தேசபந்து மைதானத்தி்ல வெட்டிக் கொலை செய்யப்பட்ட  எஸ்.ஆர்.நாகராஜன்-தங்கப்பாண்டியம்மாள் ஆகியோரின் உறவினர்கள் 9 பேர் மீது புகார் செய்திருந்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, மூன்று தனிப்படை பிரிவு அமைத்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் தொடர்புடைய மகேஸ்வரன், அப்புராஜ், கணேசன், நயினார் முருகன் உள்ளிட்ட 4 பேர் சென்னை மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.