ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

நாளை ஈரோடு வருகிறார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்

ஸ்டாலின், சென்னையில் இருந்து ஈரோட்டுக்கு ரயில் மூலம் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு வருகிறார். ரயில் நிலையத்தில் மாவட்ட, மாநகர, இளைஞரணி சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

News image
Updated On :16 மார்ச் 2013, 7:59 am

ஜபலின் ஜான்

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் 2 நாள்கள் சுற்றுப்பயணமாக ஈரோட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை வருகிறார்.

திமுக பொருளாளரும், மாநில இளைஞர் அணி செயலாளருமான ஸ்டாலின், சென்னையில் இருந்து ஈரோட்டுக்கு ரயில் மூலம் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு வருகிறார். ரயில் நிலையத்தில் மாவட்ட, மாநகர, இளைஞரணி சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பின்னர் பெருந்துறை சாலையில் உள்ள சக்தி சுகர்ஸ் விருந்தினர் இல்லத்தில் தங்குகிறார். காலை 9 மணிக்கு சம்பத்நகரில், மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மா.சுப்பிரமணியன் இல்லத்துக்குச் சென்று திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காஞ்சிக்கோவிலில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி பயிற்சிப் பாசறை கூட்டத்தில் கலந்துகொள்கிறார். பின்னர் மாலை 7 மணிக்கு கவுந்தப்பாடியில் நடைபெற உள்ள மாவட்ட திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

திங்கள்கிழமை காலை 9 மணிக்கு கோபியில் நடைபெற உள்ள கள்ளிப்பட்டி மணி, தொமுச செயலாளர் ஜீவா குழந்தைசாமி ஆகியோர் இல்ல திருமண விழாக்களில் கலந்து கொள்கிறார்.

இத்தகவலை மாவட்ட திமுக செயலர் என்கேகே.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.