ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

ஈரோட்டில் தீவிரமடையும் மாணவர்களின் போராட்டம்

ஈரோட்டில் கருங்கல்பாளையம் பாட்டாளி படிப்பகம், அரசு ஐடிஐ, பொறியியல் கல்லூரிகளின் மாணவர்கள் என இலங்கை அரசுக்கு எதிராக போராடி வரும் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

News image
Updated On :19 மார்ச் 2013, 8:42 am

ஜபலின் ஜான்

ஈரோட்டில் கருங்கல்பாளையம் பாட்டாளி படிப்பகம், அரசு ஐடிஐ, பொறியியல் கல்லூரிகளின் மாணவர்கள் என இலங்கை அரசுக்கு எதிராக போராடி வரும் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

ஈரோட்டில் கருங்கல்பாளையம் பாட்டாளி படிப்பகம் மாணவர்களும், அரசு ஐடிஐ மாணவர்களும், 4க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரி மாணவர்களும் இன்று வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு, இலங்கை அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர்.

அதன் ஒரு பகுதியாக, ஈரோடு ரயில் நிலையம் மற்றும் ஈரோடு பேருந்து நிலையத்திலும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஈரோடு மாவட்டத்தில் பல்லடம், கோபி, உள்ளிட்ட பல இடங்களில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.