கண்டெய்னர் லாரியில் தீ : லாரியில் இருந்த கார்களும் கருகின
சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரியில் தீ பிடித்ததில், அதில் இருந்த கார்களும் தீயில் கருகின.


சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரியில் தீ பிடித்ததில், அதில் இருந்த கார்களும் தீயில் கருகின.
நாசிக்கில் இருந்து கண்டெய்னர் லாரி ஒன்று 8 சொகுசு கார்களை ஏற்றிக் கொண்டு சேலத்துக்கு வந்தது. அங்குள்ள ஒரு ஷோ ரூமில் 4 கார்களை இறக்கிவிட்டு, மீதி 4 கார்களோடு கிளம்பியது.
அந்த கண்டெய்னர் லாரி சேலத்தில் வெண்ணங்குடி முனியப்பன் கோயில் அருகே சென்று கொண்டிருந்த போது, லாரியின் எஞ்ஜின் பகுதியில் இருந்து தீப்பிடித்து, லாரி முழுவதும் எரியத் துவங்கியது. இதில் லாரியில் இருந்த கார்களும் எரியத் துவங்கின. 1 மணி நேரமாக தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் நிலையில், விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் 20 பேருக்கும் மேற்பட்டோர் தீயை அணைக்க போராடி வருகின்றனர். சேலத்தில் இருந்து முக்கிய காவல்துறை அதிகாரிகளும் சம்பவப் பகுதிக்கு வந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...