தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ரயில் மறியல்: நாகை.யில் மீனவர்கள் சுமார் 3 ஆயிரம் பேர் கைது

நாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் சுமார் 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

News image
Updated On :25 மார்ச் 2013, 6:56 am

சங்கர்

நாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் சுமார் 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் கண்மூடித் தனமாகத் தாக்கப்பட்டு வருவதை மத்திய அரசு தடுக்க வலியுறுத்தியும், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருப்பதைக் கண்டித்துமிந்த ரயில் மறியல் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டு  வருகின்றனர்.

சுற்றிலும் உள்ள மீனவ கிராமங்களில் இருந்து இன்று காலையில் குவிந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 3 ஆயிரம் மீனவர்கள் ரயில் நிலையத்தில் குவிந்து எர்ணாகுளம் விரைவு ரயிலை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைத் தடுத்த போலீஸார் அவர்களைக் கைது செய்து வருகின்றனர்.

இந்தப் போராட்டம் தொடர்ந்து சீர்காழியிலும் நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.