சிதம்பரம் ஸ்ரீநடராஜர்கோயில் நந்திக்கு வெள்ளிச் சங்கிலி காணிக்கை!
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் உள்ள நந்திக்கு வெள்ளியிலான சங்கிலியை பக்தர் ஒருவர் காணிக்கையாக செலுத்தியுள்ளார்.


சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் உள்ள நந்திக்கு வெள்ளியிலான சங்கிலியை பக்தர் ஒருவர் காணிக்கையாக செலுத்தியுள்ளார்.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் சித்சபையில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடாரஜமூர்த்திக்கு எதிரே உள்ள நந்திக்கு பிரதோஷ நாளான ஞாயிற்றுக்கிழமை வெள்ளியிலான மணியுடன் கூடிய சங்கிலியை மதுரையைச் சேர்ந்த பரத்வாஜ் என்ற பக்தர் காணிக்கையாக வழங்கியுள்ளார். 21 மணியுடன் சேர்ந்த இந்த வெள்ளி சங்கிலி சுமார் 220 கிராம் கொண்டது. இதன் மதிப்பு சுமார் 15 ஆயிரம் ரூபாய் ஆகும். ஞாயிற்றுக்கிழமை பிரதோஷத்தின் போது நந்திக்கு பக்தர் காணிக்கையாக அளித்த வெள்ளி சங்கிலி அணிவிக்கப்பட்டு கேதாரதீட்சிதரால் சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...