கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் நெடுஞ்சாலை ரோந்து வாகனம் மோதி விபத்து: எஸ்.ஐ. பலத்த காயம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் நெடுஞ்சாலை ரோந்து வாகனம் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த சிறப்பு சார்பு ஆய்வாளர் கணேசன் பலத்த காயம் அடைந்தார்.

Updated On :26 மார்ச் 2013, 7:09 am

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் நெடுஞ்சாலை ரோந்து வாகனம் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த சிறப்பு சார்பு ஆய்வாளர் கணேசன் பலத்த காயம் அடைந்தார்.

நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்கவும், விபத்தில் காயமுற்றவர்களை உடனடியாக மீட்பதற்காகவும் தமிழக அரசு நெடுஞ்சாலை ரோந்து காவல் படையை அமைத்துள்ளது. இவர்களுக்கு அதற்காக தற்போது புதிய வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியில் செவ்வாய்கிழமை அதிகாலை இந்த வாகனம் ஈடுபட்டிருந்தது. அழகாபுரிக்கும்-கிருஷ்ணன்கோவிலுக்கும் இடையே வடுகபட்டி விலக்கு அருகே சாலை ஓரம் உள்ள பாலத்தில் ரோந்து வாகனம் மோதி பாலத்தின் மீது ஏறி பள்ளத்தில் சாய்ந்தது.

இதில் அதில் பணியில் இருந்து சிறப்பு சார்பு ஆய்வாளர் கணேசன் பலத்த காயம் அடைந்தார். வாகனமும் பலத்த சேதமுற்றது. இது குறித்த புகாரின் வாகனத்தை ஓட்டி வந்த, மாற்றுப் பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் முனீஸ்வரன் மீது நத்தம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.