92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பிஎஸ்என்எல் பிராண்ட்பேன்ட் இணைப்பு பில்லுடன் கூடுதல் கட்டணம்: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

கடந்த மாதம் பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள பிஎஸ்என்எல் பிராட் பேன்ட் இணைப்பு தொலைபேசி பில்லில் ஹ

News image
Updated On :28 மார்ச் 2013, 12:58 pm

ஜி.சுந்தரராஜன்

பிஎஸ்என்எல் பிராட் பேன்ட் இணைப்பு தொலைபேசி பில்லுடன் கூடுதலாக ரூ.298 வசூலிக்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியுற்றுள்ளனர்.

கடந்த மாதம் பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள பிஎஸ்என்எல் பிராட் பேன்ட் இணைப்பு தொலைபேசி பில்லில் ஹங்கமா மியுசிக் (Hungama music), ஹங்கமா மூவிஸ் (hungama movies) என்ற சிறப்பு ஒளிபரப்பிற்காக ரூ.298 என கூடுதலாக கட்டணம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ஒளிபரப்பை வாடிக்கையாளர்கள் கேட்கவும் இல்லை, பார்க்கவும் இல்லை. இதுகுறித்து வாடிக்களையாளர்களிடம் அனுமதி பெறாமல் பில்லில் கூடுதலாக தொகை சேர்க்கப்பட்டுள்ளதை பார்த்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியுற்றுள்ளனர்.

இதுகுறித்து பிஎஸ்என்எல் தொலைபேசிதுறை அதிகாரிகளை தொடர்பு கொண்டால் சரியான தகவலை தர மறுப்பதாகவும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தொலைபேசிதுறை அதிகாரிகளை நாம் தொடர்பு கொண்டு கேட்ட போது "இணையதளத்தில் தனியார் நிறுவனத்தின் விளம்பரத்தை கிளிக் செய்து இருப்பார்கள், அதனால் அந்த கட்டணம் அதில் சேர்த்து வசூலிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

வாடிக்கையாளர்கள் நாங்கள் எந்த ஒளிபரப்பையும் பார்க்கவில்லை. எந்த விளம்பரத்தையும் கிளிக் செய்யவில்லை. ஆனால் ஹங்கமா மியுசிக்கிற்கு ரூ.149-ம், ஹங்கமா மூவிஸ்க்கு ரூ.149-ம் சேர்த்து ரூ.298 கூடுதல் கட்டணம் பில்லில் சேர்க்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. தனியார் செல்போன் நிறுவனங்களை நம்பாமல், பிஎஸ்என்எல் பிராண்ட் பேன்ட் இணைப்பை பெற்றோம். தற்போது அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்திலேயே இதுபோன்று தனியார் நிறுவனங்களை உள்ளே நுழைத்து வாடிக்கையாளர்களை ஏமாற்றி கூடுதல் கட்டணம் வசூலிப்பது வேதனையாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது என்கிறார் பாதிக்கப்பட்ட சிதம்பரத்தைச் சேர்ந்த யு.வெங்கடேச தீட்சிதர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.