லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகர் மாவட்ட ஓய்வூதியம் பெறுவோருக்கான நேர்காணல் ஏப்.1 முதல் தொடக்கம்

விருதுநகரில் மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களிலும் ஓய்வூதியம் பெறுவோர் நிகழாண்டிற்கான நேர்காணல் ஏப்-1ம் தேதி தொடங்கி வங்கிகள் வாரியாக குறிப்பிட்டுள்ள நாள்களில் நடைபெற

Updated On :28 மார்ச் 2013, 12:13 pm

விருதுநகரில் மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களிலும் ஓய்வூதியம் பெறுவோர் நிகழாண்டிற்கான நேர்காணல் ஏப்-1ம் தேதி தொடங்கி வங்கிகள் வாரியாக குறிப்பிட்டுள்ள நாள்களில் நடைபெற இருக்கிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: இதில், அந்தந்த பகுதிகளில் உள்ள சார்நிலைக் கருவூலங்களில் ஓய்வூதிய புத்தகம் மற்றும் தேசிய வங்கிகளில் செல்லேடு புத்தகம் உள்ளிட்ட விவரங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும்.

மேலும், பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருப்போர் ஏப்.1ம் தேதி முதல் தொடர்ந்து 15-ம் தேதி வரையிலும், இந்தியன் வங்கியில் வைத்திருப்போர் 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரையும், கனரா வங்கியில் உள்ளவர்கள் 19-ம் தேதி, முதல் 23ம் தேதி வரையும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வைத்திருப்போர் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரையிலும், இதர வங்கிகளில் வைத்திருப்போர் 27-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையிலும் நேர்காணல் நடைபெற இருக்கிறது.

அதேபோல், மே-1ம் தேதி முதல் 31-ம் தேதி வரையிலும் அனைத்து வங்களிலும் கணக்கு வைத்திருப்போர் மற்றும் விடுபட்டோர் ஆகியோர் மாவட்டம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் ஓய்வூதியர்கள் அனைவரும் ஓய்வூதியம் சம்பந்தமான அனைத்து ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி சரிபார்த்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.