லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகரில் காங். அலுவலகத்தை முற்றுகையிட வந்த மாணவர்கள் மீது தாக்குதல்

விருதுநகரில் காங்கிரஸ் எம்.பி. அலுவலகத்தை முற்றுகையிட வந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 4 பேர் காயம் அடைந்தனர்.

Updated On :30 மார்ச் 2013, 7:44 am

விருதுநகரில் காங்கிரஸ் எம்.பி. அலுவலகத்தை முற்றுகையிட வந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 4 பேர் காயம் அடைந்தனர்.

தமிழீழ விடுதலை மாணவர் இயக்கத்தினர் 20 பேர், காங்கிரஸ்  எம்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது எம்.பி. அலுவலகத்தில் எம்.பி.யின் நேர்முக உதவியாளர் உள்ளிட்ட சிலர் இருந்தனர். அவர்கள், மாணவர்களைக் கலைந்து போகச் சொல்லி மிரட்டினர். பின்னர் கம்பு கட்டைகளால் அவர்களைத் தாக்கி விரட்டியடித்தனர். இதில் மாணவர்கள் நால்வருக்கு காயம் ஏற்பட்டது. இவர்கள் பின்னர் பஜார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதை அடுத்து, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நால்வரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.