விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர்-கிருஷ்ணன்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் தவறுதலாக ஊர் பெயர் குறிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள வழிகாட்டும் பெயர் பலகையால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளார்கள். மாவட்ட நிர்வாகம் பெயர் பலகையில் உள்ள பிழையை திருத்தி உடனடியாக புதிய பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்க இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்-கிருஷ்ணன்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் பூவாணி விலக்கு உள்ளது. இந்த விலக்கின் வழியே பாடக்குளம், நிறைமதி, விழுப்பனூர், மல்லி வழியாக சிவகாசி வரை செல்ல இயலும். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பூவாணி விலக்கில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் பெயர் பலகை வைக்கப்பட்டது. இதில் பூவாணி என்பது தவறுதலாக பூவலணி என்று பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. பூவாணி சாலையை புதியதாக பயன்படுத்த இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வருவோர், பூவலணி என்ற பெயர் பலகையைப் பார்த்துவிட்டு இது பூவாணி இல்லை என்று கருதி ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் கிருஷ்ணன்கோவில் வழியே தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இது குறித்து பூவாணி கிராமத்தைச் சேர்ந்த ஏ.ஏ.பில்டர்ஸ், நிர்வாக இயக்குநர் அ.மகேந்திரன் கூறும் போது, எத்தனையோ நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் இந்த பிரதானச் சாலை வழியே சென்று வருகிறார்கள். இவ்வாறு தவறுதலாக பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதை பார்த்தும், கண்டுகொள்ளாமல் செல்கிறார்கள். பெயர் பலகைகள் வைக்கும் போது அதனை அலுவலர்கள் சரி பார்த்து தான் ஒப்பந்ததாரர்களுக்கு பணம் அனுமதித்திருப்பார்கள். சிறிய பிழையாக இருந்தாலும் இதனால் இப் பாதையை புதியதாக பயன்படுத்த வருவோர், பூவாணி என்ற ஊரே இல்லை என்றும் சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அலுவலர்கள் உடனடியாக இந்தப் பெயர் பலகையை எடுத்துவிட்டு, சரியாக ஊர் பெயர் எழுதிய பெயர் பலகை வைக்க வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

