லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

ஒரு வழிப்பாதையில் ஆட்டோ ஓட்ட அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்

ராஜபாளையத்தில் ஒரு வழிப்பாதையில் ஆட்டோக்கள் ஓட்டுவதற்கு  விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :6 மே 2013, 8:45 am

ராஜபாளையத்தில் ஒரு வழிப்பாதையில் ஆட்டோக்கள் ஓட்டுவதற்கு  விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.அசோகன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு ஆட்டோ சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.சுவாமிநாதன், மாவட்ட தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தற்போது ராஜபாளையம் நகரில் ஓரு வழிப்பாதையில் ஆட்டோக்கள் ஓட்ட முடியாத நிலை இருக்கிறது. இப்பாதை வழியாக செல்லும் வகையில் தான் பயணிகள் வருகிறார்கள். அதனால், இப்பாதையில் ஆட்டோக்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்து அனுமதி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், ராஜபாளையத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்டோ ஓட்டுநர் சங்கம் உள்ளிட்ட அனைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.