கோவையில் சுமங்கலித் திட்டத்தை செயல்படுத்தும் பஞ்சாலைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சி.த. செல்லபாண்டியன் உறுதி அளித்தார்.
சட்டப்பேரவையில் நடைபெற்ற தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பேரவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் எம். ஆறுமுகம் (வால்பாறை), கோவை சில பஞ்சாலைகளில் பயிற்சியாளர் என்ற பெயரில் சுமங்கலித் திட்டத்தை மறைமுகமாக செயல்படுத்தி வருகின்றனர். இததிட்டத்தின் மூலம் இளம் பெண்களை அடைத்து வைத்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 30 ஆயிரம் கொடுத்து அனுப்பும் அவலம் தொடர்கிறது. எனவே, இந்த ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அவருக்குப் பதிலளித்து அமைச்சர் பேசியதாவது:
பயிற்சியாளர் என்ற பெயரில் பெண்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக உறுப்பினர் குற்றம்சாட்டுகிறார். இதுவரை அதுபோன்ற புகார்கள் எதுவும் அரசுக்கு வரவில்லை. கோவையில் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆலைகளில் உடனடியாக ஆய்வு நடத்தி, சுமங்கலித் திட்டம் இருப்பது உண்மையானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாணவியை கத்தியால் வெட்டியவா்களை கைது செய்ய வலியுறுத்தி மீஞ்சூா் காவல் நிலையம் முற்றுகை
சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவா் கைது

இளையான்குடி பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சோலையாண்டவா் கோயிலில் பூச்சொரிதல் விழா
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

