ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு!
/

போடி அருகே கிணற்றில் இளைஞர் சடலம்: போலீஸார் விசாரணை

போடி அருகே இளைஞர் சடலம் கிணற்றில் மிதந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On :12 மே 2013, 12:10 pm IST

போடி அருகே இளைஞர் சடலம் கிணற்றில் மிதந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     போடி அருகே மீனாட்சிபுரம் பெரிய கண்மாய் பகுதியில் தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை காலையில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் ஒன்று மிதப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் உதவி காவல் கண்காணிப்பாளர் சசிமோகன், போடி டி.எஸ்.பி. கு.அருள்அமரன், புறநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன், டவுன் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் ஆகியோர் சென்று தீயணைப்பு துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்டனர்.

     பின்னர் விசாரணையில் இறந்து கிடந்தவர் பத்திரகாளிபுரம் கிராமத்தை சேர்ந்த பழனியப்பன் மகன் புன்னைவனம் (31) என்றும், இவர் கொத்தனார் வேலை செய்து வருவதும், இவருக்கு சுமதி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகள் இருப்பதும் தற்போது போடியில் குடியிருந்து வருவதும் தெரிந்தது.

     மேலும் இளைஞர் மதுப்பழக்கத்தில் கிணற்றின் அருகே குடிக்கும்போது தவறி விழுந்து இறந்து போனாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என போடி புறநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.