சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

வியாசார்பாடியில் மின்வாரிய அலுவலகம் சூறை: 2 பேர் கைது

வியாசர்பாடி, சர்மாநகர், சாஸ்திரி நகர் பகுதியில்  நேற்று(சனிக்கிழமை) காலை 9 மணியளவில் மின்தடை ஏற்பட்டது. இந்த மின்தடை இரவு வரை நீடித்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது சரியான பதில் கூறவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் உள்பட

Updated On :12 மே 2013, 6:49 pm IST

சென்னை வியாசார்பாடியில் மின்வாரிய அலுவலகம் சூறையாடப்பட்டதையடுத்து 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

வியாசர்பாடி, சர்மாநகர், சாஸ்திரி நகர் பகுதியில்  நேற்று(சனிக்கிழமை) காலை 9 மணியளவில் மின்தடை ஏற்பட்டது. இந்த மின்தடை இரவு வரை நீடித்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது சரியான பதில் கூறவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர்  நேற்று எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். அப்போது சிலர் மின் வாரிய அலுவலகத்துக்குள் புகுந்து கண்ணாடி, ஜன்னல், மேஜைகளை நொறுக்கி சூரையாடினர். இது குறித்த தகவலறிந்த போலீஸார் பொது மநக்களை சமாதானம் செய்தனர். மேலும் மின் விநியோகமும் வழங்கப்பட்டது.

ஆனால் மின் வாரிய அலுவலகம் சூறையாடப்பட்டது குறித்து அவ்வலுவகத்தின் உதவி பொறியாளர் ராமையா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் சாஸ்திரி நகரை சேர்ந்த பூமிநாதன், பாலனை கைது செய்தனர். அவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.