கடலூர் மாவட்டத்தில் மேலும் 11 கடைகளில் 20 ரூபாய் அரிசி விற்பனை

வெளிச்சந்தையில் அரிசியின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பல்பொருள் அங்காடிகள், கூட்டுறவு சங்கங்களின் பல்பொருள் அங்காடிகள் மற்றும் சிறப்பு அங்காடிகளில் ஒரு கிலோ அரிசி ரூ. 20-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.கடலூர்
Updated on
1 min read

கடலூர் மாவட்டத்தில் மேலும் 11 கடைகளில் ஒரு கிலோ அரிசி ரூ. 20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தி்குறிப்பில்.

வெளிச்சந்தையில் அரிசியின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பல்பொருள் அங்காடிகள், கூட்டுறவு சங்கங்களின் பல்பொருள் அங்காடிகள் மற்றும் சிறப்பு அங்காடிகளில் ஒரு கிலோ அரிசி ரூ. 20-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் ஏற்கனவே நெய்வேலி டவுன்ஷிப்பில் இரண்டு கடைகளிலும், கடலூரில் ஒரு கடையிலும், கூட்டுறவுத்துறை மூலம் கடலூரில் ஒரு கடையிலும், விருத்தாசலத்தில் இரு கடைகளிலும், நெய்வேலி டவுன்ஷிப்பில் 4 கடைகளிலும் ஆக மொத்தம் 7 கடைகளில் ரூ. 20க்கு ஒரு கிலோ அரிசி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக கூட்டுறவு துறை மூலம் திருப்பாதிரிப்புலியூர், முதுநகர், வசந்தராயன்பாளையம், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில் ஆகிய இடங்களில் சிஎம்எஸ் கடைகளிலும், பெண்ணாடம் கூட்டுறவு ரேஷன் கடை, லால்பேட்டை, பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களில் வாடகை கட்டடங்களில் இயங்கும் கடைகளிலும், மங்கலம்பேட்டை கூட்டுறவுத்துறை வளாகத்திலும் அரிசி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தரமான அரிசியை பெற்று பயனடைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com