92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

அண்ணாமலைநகர் பள்ளி சத்துணவு கூடத்தில் சமையல் பாத்திரங்கள் திருட்டு!

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள பள்ளி சத்துணவுக்கூடத்தில் ரூ 10 ஆயிரம் மதிப்புள்ள சமையல் பாத்திரங்கள் திருடு போனது.

News image
Updated On :15 மே 2013, 6:49 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள பள்ளி சத்துணவுக்கூடத்தில் ரூ 10 ஆயிரம் மதிப்புள்ள சமையல் பாத்திரங்கள் திருடு போனது.

சிதம்பரம் அண்ணாமலைநகர் மீனாட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள சத்துணவுக்கூட்டத்தில் பொறுபாளராக பணிபுரிந்து வருபவர் நாச்சியம்மை (56). இவர் கடந்த ஏப்.30-ம் தேதி சத்துணவுக் கூடத்தை பூட்டிக் கொண்டு கோடை விடுமுறைக்காக வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஊர் திரும்பிய நாச்சியம்மை பள்ளியில் உள்ள சத்துணவுக்கூடத்திற்கு சென்ற போது கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள சமையல் பாத்திரங்கள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து நாச்சியம்மை கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.