பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பழுது: மின் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் இன்று காலை 7 மணி அளவில் 2 வது மின் யூனிட்டில் பழுது ஏற்பட்டது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :17 மே 2013, 3:48 am

இன்பராஜ்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் இன்று காலை 7 மணி அளவில் 2 வது மின் யூனிட்டில் உள்ள கொதிகலனில் பழுது ஏற்பட்டது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 1050 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் 5 யூனிட்கள் இயங்கி வருகிறது. இதில் ஏற்கெனவே 3வது யூனிட்டில் பழுது ஏற்பட்டதால், அதில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை 2வது யூனிட்டிலும் பழுது ஏற்பட்டுள்ளதால், அந்த யூனிட்டில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. பழுதை சரி செய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.