தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட கடல் பல்லி வைத்திருந்ததாக ஒருவர் கைது
தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட கடல் பல்லியைப் பிடித்து வைத்திருந்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 5 கிலோ கடல் பல்லி பறிமுதல் செய்யப்பட்டது.


தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட கடல் பல்லியைப் பிடித்து வைத்திருந்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 5 கிலோ கடல் பல்லி பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த துரைராஜ் என்பவர், மன்னார்வளைகுடா பகுதியில் காணப்படும் அரிய வகை கடல் உயிரினமான மருத்துவ குணம் கொண்ட கடல்பல்லியைப் பிடித்து வைத்திருந்தார். இதனை கடல் கரையில் கருவாடுபோல் காயவைத்து பின்னர் மருத்துவத்துக்கு பயன்படுத்துவர் என்று கூறப்படுகிறது. 5 கிலோ எடை கொண்ட அந்தப் பல்லி சுமார் ரூ. 1.25 லட்சம் பெறுமானமுள்ளதாம். தூத்துக்குடி உதவி வன பாதுகாவலர் ராஜேந்திரன் இது குறித்து விசாரணை மேற்கொண்டு, கடல்பல்லியைப் பறிமுதல் செய்து, துரைராஜை கைது செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...