புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

காங்கிரஸ் பிரமுகர் மணிரத்தினம் மீது வழக்குப் பதிவு செய்ய விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தல்

தொல்.திருமாவளவனை பற்றி அவதூறாக பேசிய காங்கிரஸ் கட்சி பிரமுகர் கே.ஐ.மணிரத்தினம் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சிதம்பரம் ஏஎஸ்பியிடம் வலியுறுத்தியுள்ளனர்.

News image
Updated On :21 மே 2013, 11:01 am

ஜி.சுந்தரராஜன்

தொல்.திருமாவளவனை பற்றி அவதூறாக பேசிய காங்கிரஸ் கட்சி பிரமுகர் கே.ஐ.மணிரத்தினம் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சிதம்பரம் ஏஎஸ்பியிடம் வலியுறுத்தியுள்ளனர்.

சிதம்பரம் ஏஎஸ்பியிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் தலைமையில் மாநில நிர்வாகிகள் சு.திருமாறன், அ.கலியபெருமாள், மாவட்ட நிர்வாகிகள் பி.குறிஞ்சிவளவன், பால.அறவாழி, பெரு.திருவரசு, க.அரசு, மு.வெற்றிவேந்தன், பெரு.சரித்திரன், ராஜி, சமத்துவளவன், அண்ணாதுரை, ஜான், சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை சென்று மனு அளித்தனர்.

மனுவிபரம்:

மே.19-ம் தேதி சிதம்பரம் காந்திசிலை அருகே நடைபெற்ற காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் கே.ஐ.மணிரத்தினம் எங்கள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனை பற்றி அவதூறாகவும், ஒருமையிலும் பேசியுள்ளார். மேலும் கலவரக்காரர், கட்டப் பஞ்சாயத்துக்காரர் என இழிவு படுத்தி பேசியும், இவருக்கு ஆண்டவன் கூலி கொடுப்பான் என உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். இதுகுறித்து நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். எனவே இப்புகார் மீது உரியபிரிவின் கீழ் வழக்குப் பதிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வ.க.செல்லப்பன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.