92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ராஜீவ் நினைவு தினம்: சிதம்பரத்தில் களைகட்டிய டிஜிட்டல் பேனர்கள்

மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி 22-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சிதம்பரம் நகரில் கோஷ்டி பூசலை வெளிப்படுத்தாமல், வித்தியாசமான முறையில் காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர்கள் ஒட்டியும், டிஜிட்டல் பேனர்கள் பொருத்தியும் உள்ளனர்.

News image
Updated On :21 மே 2013, 11:05 am

ஜி.சுந்தரராஜன்

மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி 22-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சிதம்பரம் நகரில் கோஷ்டி பூசலை வெளிப்படுத்தாமல், வித்தியாசமான முறையில் காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர்கள் ஒட்டியும், டிஜிட்டல் பேனர்கள் பொருத்தியும் உள்ளனர்.

1991-ம் ஆண்டு மே மாதம் சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரக்கூட்டத்திற்கு வந்த அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி மற்றும் பலர் வெடிகண்டு வைக்கப்பட்டு இறந்தனர். மே.21 செவ்வாய்க்கிழமை ராஜீவ்காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு சிதம்பரம் நகரில் ராஜீவ்காந்தி படத்தை போட்டு, அதன் கீழ் அவருடன் சேர்ந்து மரணமடைந்த பி.கே.குப்தா, இக்பால், ராஜகுரு, எட்வர்டு ஜோசப், எத்திராஜ், சுந்தரராஜுபிள்ளை, ரவி, தர்மன், சந்திரா, லதாகண்ணன், கோகிலவாணி, சாந்தனிபேகம், முனுசாமி, டேரியில்பீட்டர், சரோஜாதேவி என்ற பெயர்களை குறிப்பிட்டு 'மறக்க முடியுமா இவர்களின் மரணத்தை!, வேரறுப்போம் தீவிரவாதத்தை! என மிகப்பெரிய டிஜிட்டல் பேனர்கள் பாரதியார் கிராம வங்கி இயக்குநர் கே.துரைபாலசந்தர் என்ற பெயரில் தேரோடும் வீதிகளில் வைக்கப்பட்டுள்ளது. அதுபோன்று நகரம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.