அண்ணாமலைப் பல்கலைக்கழக கட்டடங்கள்:பொதுப்பணித் துறையினர் ஆய்வு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கட்டடங்கள் அனைத்தும் தமிழக பொதுப்பணித்துறையினரிடம் ஒப்படைத்து, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வெள்ளிக்கிழமை உயரதிகாரிகளால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கட்டடங்கள் அனைத்தும் தமிழக பொதுப்பணித்துறையினரிடம் ஒப்படைத்து, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வெள்ளிக்கிழமை உயரதிகாரிகளால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு போராட்டம் விளைவாக தமிழகஅரசு 2 குழுக்களை அனுப்பி விசாரணை மேற்கொண்டு அக்குழு 11 பிரிவுகளின் கீழ் முறைகேடுகள் நடந்துள்ளதாக அரசுக்கு அறிக்கை சமர்பித்தது. இந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாகியாக ஷிவ்தாஸ்மீனாவை கடந்த ஏப்.4-ம் தேதி தமிழகஅரசு நியமனம் செய்து, அவர் உடனடியாக பொறுப்பேற்றார்.
பின்னர் தமிழகஅரசு உயர்கல்வித்துறை மூலம் தமிழக சட்டப்பேரவையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து பல்கலைக்கழகத்தில் தமிழகஅரசால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகி ஷிவ்தாஸ்மீனாவால் பல்வேறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் கட்டடங்கள் அனைத்தும் தமிழக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர அதற்கான ஆய்வு பணிகளை வெள்ளிக்கிழமை பொதுப்பணித்துறை கட்டடங்கள் பிரிவு மேற்பார்வை பொறியாளர் மனோகரன் (வேலூர்), செயற்பொறியாளர் பிரேம்சந்திரன் (கடலூர்) ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...