சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியினர் 9 பெண்கள் உள்ளிட்ட 65 பேர் கைது செய்யப்பட்டனர்.
சில்லரை வணிகத்தில் அந்நிய நிறுவனங்களை அனுமதிக்காதே, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து, பொதுத்துறை பங்குகளை விற்காதே, உணவு பொருள்களுக்கு பதில் பணம் வழங்கும் திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி சார்பில் சிதம்பரத்தில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
சிதம்பரம் தெற்குசன்னதியிலிருந்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு மேலவீதியில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினரும், மாநில மாதர் சங்கத் தலைவியுமான பி.ஜான்சிராணி, நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் சி.வெங்கடேசன், நிர்வாகிகள் எஸ்.ராஜா, எம்.ஜெயசித்ரா, ஜி.பாண்டியன், ஜே.எம்.ஜின்னா, எம்.வஜ்ரவேல், எம்.அமுதா, ஜி.மாரியப்பன், எஸ்.சங்கமேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்ட 9 பெண்கள் உள்ளிட்ட 65 பேரை நகர போலீஸார் கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோயிலில் மாநிலக்குழு உறுப்பினர் மூசா தலைமையில் மறியலில் ஈடுபட்ட 79 பேரும், புவனகிரியில் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.மாதவன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 42 பேரும், பரங்கிப்பேட்டையில் மாவட்டக்குழு உறுப்பினர் பி.கற்பனைச்செல்வன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 40 பேரும், குமராட்சியில் ஒன்றியச் செயலாளர் மாசிலாமணி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 47 பேரும், புத்தூரில் கீரப்பாளையம் ஒன்றியச் செயலாளர் பி.வாஞ்சிநாதன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 39 பேரும் கைது செய்யப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுக்கோட்டை: மகனுடன் நிலத் தகராறு.. பெற்றோர் தூக்கிட்டுத் தற்கொலை!

தங்கம், வெள்ளி விலை குறைவு! இன்றைய நிலவரம்!

எங்களைக் காக்கப் பிரதமர் தயாராக இருக்கிறாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!

தீக்கிரையான அமெரிக்க வலேரோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்! தாக்குதல் நடத்தப்பட்டதா?
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

