பாரம்பரிய விவசாய பொருள்கள் குறித்த விழிப்புணர்வு பேரணி!
சிதம்பரத்தில் தமிழகஅரசு வேளாண்துறை சார்பில் பள்ளி மாணவர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்ற பாரம்பரிய விவசாய பொருள்கள் குறித்த விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.


சிதம்பரத்தில் தமிழகஅரசு வேளாண்துறை சார்பில் பள்ளி மாணவர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்ற பாரம்பரிய விவசாய பொருள்கள் குறித்த விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
பேரணி சிதம்பரம் கீழரதவீதியில் உள்ள வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலிருந்து புறப்பட்டது. பேரணியில் பள்ளி மாணவ, மாணவியர்களும், விதை பண்ணை விவசாயிகள் மற்றும் முன்னோடி விவசாயிகள் பங்கேற்றனர். பேரணியை உதவிஆட்சியர் எல்.சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வேளாண் உதவி இயக்குநர் எஸ்.ரமேஷ் முன்னிலை வகித்தார். பள்ளி நிர்வாகி வீனஸ் எஸ்.குமார், தலைமை ஆசிரியர் ஜி.மகேஷ்சுந்தர் ஆகியோர் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பேரணி பாரம்பரிய விவசாய பொருள்களான இளநீர், பருத்தி ஆடைகள், சீயக்காயம், சிறிய தாணிய பயிறுகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் படங்கள் அடங்கிய பதாதைகளுடன் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...