விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியில் கூட்டுறவு வங்கி மற்றும் ரேசன் கடைகளில் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சுழி பகுதியில் உள்ள குச்சம்பட்டி மற்றும் புதூர் ஆகிய கிராமங்களில் உள்ள வைகை அங்காடிகளில் ஆட்சியர் அதிகாரிகளுடன் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களுக்கு தேவையான ரேசன் பொருள்களான அரிசி, பருப்பு மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்டவைகள் முறைப்படி விநியோகம் செய்யப்படுகிறதா, சரியான அளவுகளில் வழங்கப்படுகிறதா எனவும் கேட்டறிந்தார். பின்னர் அங்குள்ள பொருள்கள் வழங்கும் விநியோக பதிவேடு, இருப்பு பதிவேடு மற்றும் மின்னனு தராசு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.
மேலும், ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள பொருள்கள் அனைத்தும் உரிய நேரத்திற்குள் விநியோகம் செய்ய வேண்டும் என விற்பனையாளர்களை மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின் போது அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் குணசேகரன் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெக வேட்பாளரை ஆதரித்து நடிகா் ராமராஜன் பிரசாரம்!
சங்கரன்கோவிலில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நாட்டிலேயே வளா்ச்சியில் தமிழகம் முதன்மை! - கே.வி. தங்கபாலு

குடிபோதையில் தகராறு செய்த தம்பி வெட்டிக் கொலை; அண்ணன் கைது
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

