கல்லிடைக்குறிச்சியில் ஆசிரியை வீட்டை உடைத்து திருட்டு
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் பூட்டியி்ருந்த ஆசிரியை வீட்டை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.


திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் பூட்டியி்ருந்த ஆசிரியை வீட்டை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கல்லிடைக்குறிச்சி ஏகாம்பரபுரம் தெருவை சேர்ந்த சங்கர் (40). புரோகிதர். இவரது மனைவி மீனா (38). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணி செய்து வருகிறார். இத்தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சங்கர் காரில் நாகர்கோவில் சென்றபோது விபத்தில் சிக்கி காயமடைந்தார். திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் சங்கர் சிகிச்சை பெற்று வருகிறார். மீனா வீட்டை பூட்டி விட்டு குழந்தையுடன் மருத்துவமனையில் கணவருடன் தங்கியுள்ளார்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பூட்டியிருந்த சங்கர் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்த ரொக்கப்பணம் ரூ. 30,000 யை திருடி சென்றனர். தங்கநகைகள் வைத்திருந்த மற்றொரு பீரோவின் பூட்டை உடைக்க முடியாததால் மர்ம நபர்கள் விட்டு சென்றுள்ளனர்.
இது குறித்து கல்லிடைக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் இந்திரா வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...