புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சிதம்பரத்தில் ஸ்ரீமகாதட்சிணாமூர்த்திக்கு சிறப்பு மகாயாகம் மற்றும் மகா அபிஷேகம்

குருபெயர்ச்சியை முன்னிட்டு ஸ்ரீவேதபாஸ்கர மஹாயக்ஞ மண்டலி சார்பில் சிதம்பரம் மேலவீதி கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் ஸ்ரீமகா தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு யாகம் மற்றும் மகாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 மே 2013, 12:05 pm

ஜி.சுந்தரராஜன்

குருபெயர்ச்சியை முன்னிட்டு ஸ்ரீவேதபாஸ்கர மஹாயக்ஞ மண்டலி சார்பில் சிதம்பரம் மேலவீதி கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் ஸ்ரீமகா தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு யாகம் மற்றும் மகாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் மேலவீதி கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் குருபெயர்ச்சி சிறப்பு பூஜை  ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீமகாகணபதி ஹோமத்துடன் தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. திங்கள்கிழமை ஸ்ரீகன்னிகாபரமேஸ்வரிக்கு அபிஷேக ஆராதனை, கலசங்கள் ஆவாஹனம், கலசங்களுக்கு உபசார பூஜைகள். மாலை 6 மணிக்கு தேவார இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மே 28-ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 9.10 மணிக்கு குருபகவவான் ரிஷப ராசியிலிருந்து, மிதுன ராசிக்கும் பிரவேசிப்பதால் காலை கணபதி ஹோமத்துடன் சிறப்பு மகாயாகம் தொடங்கி நவக்கிரக ஹோமம், சகல திரவியங்களின் ஆகுதி மற்றும் மகா பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு 29 திரவியங்களால் மகா அபிஷேகமும், பின்னர் இரவு 9 மணிக்கு மேல் மகா தீபாராதணை நிகழ்ச்சியும் நடைபெற்றது. திரளான மக்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று குருபெயர்ச்சியை முன்னிட்டு சங்கல்பம் செய்து வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை மண்டலி நிர்வாகி ஜி.ஆர்.வேம்புதீட்சிதர் மற்றும் நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.