புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சிதம்பரம் அருகே ஓய்வுபெற்ற பள்ளி கிளார்க் அடித்து கொலை

சிதம்பரம் அருகே வடமூரில் நடுநிலைப்பள்ளியில் இருந்து ஓய்வு பெற்ற கிளார்க் ஒருவர் மர்மநபர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

News image
Updated On :30 மே 2013, 5:32 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே வடமூரில் நடுநிலைப்பள்ளியில் இருந்து ஓய்வு பெற்ற கிளார்க் ஒருவர் மர்மநபர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

சிதம்பரம் அருகே உள்ள வடமூர் காலனியைச் சேர்ந்த அப்பாதுரை (70). வடமூர் நடுநிலைப்பள்ளி ஓய்வுபெற்ற கிளார்க்கான இவர் புதன்கிழமை மாலை சிதம்பரம் நகருக்கு பஸ்ஸில் வந்துவிட்டு ஊர் திரும்பியுள்ளார். அப்பாதுரை வடமூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி ஊருக்குள் நடந்து சென்று கொண்டிருந்த போது மர்மநபர்கள் அவரது தலையில் தாக்கிவிட்டு தலைமறைவாயினர். இதில் படுகாயமுற்று அப்பாதுரை சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்த சிதம்பரம் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.