சிதம்பரம் மாணவி ஆர்.ஸ்ரீதுர்கா மாநில அளவில் முதலிடம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்.ஸ்ரீதுர்கா 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்.ஸ்ரீதுர்கா 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
மாணவி ஆர்.ஸ்ரீதுர்கா பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-99, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-100, சமூகஅறிவியல்-100. மொத்த மதிப்பெண்கள் 498. சிதம்பரம் சி.கொத்தங்குடி மீதிகுடி ரோடு நம்பர் 11 பாரதிநகரில் வசிக்கும் ஆர்.ஸ்ரீதுர்காவின் தந்தை பெயர் ராஜாகோபாலன். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகஅலுவலகத்தில் சூப்ரண்டன்டாக பணிபுரிகிறார். தாயார் பெயர் ரமா. இவர்களுக்கு 2 மகள்கள் முதல் மகள் ஸ்ரீதுர்கா, இரண்டாவது மகள் மாதங்கி. இரண்டாவது மகள் மாதங்கி வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வருகிறார். மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி ஆர்.ஸ்ரீதுர்காவை பள்ளி நிர்வாகி வீனஸ் எஸ்.குமார், அவரது துணைவியார் ரூபியாள்ராணி, தலைமைஆசிரியர் ஜி.மகேஷ்சுந்தர் ஆகியோர் பாராட்டி இனிப்பு வழங்கினர்.
முதலிடம் பெற்ற சிதம்பரம் மாணவி ஆர்.ஸ்ரீதுர்கா செய்தியாளர்களிடையே தெரிவித்தது: இந்த உழைப்புக்கு முக்கிய காரணம் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அளித்த ஊக்கம்தான். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கும் மேல் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நான் கடினமாக படிக்கவில்லை. தினமும் 4 மணி நேரம்தான் படித்தேன். வகுப்பறையில் ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை ஊர்ந்து கவணித்து, புரிந்து படித்ததால்தான் அதிக மதிப்பெண்கள் பெற்றேன். மாநில அளவில் முதலிடம் பெறுவேன் என நான் எதிர்பார்க்கவே இல்லை. எனக்கு பாடங்களில் சமூகஅறிவியல்தான் மிகவும் பிடித்த பாடமாகும். நான் பொறியியல் பட்டப்படிப்பு படித்து, குரூப்-1 தேர்வு எழுதி ஐஏஎஸ் ஆவதுதான் எனது விருப்பம் என மாணவி ஆர்.துர்கா தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...