புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சிதம்பரம் மாணவி வசுமித்ரா மாநில அளவில் மூன்றாமிடம்

சிதம்பரம் நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி எல்.வி.வசுமித்ரா 496 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ளார்.

News image
Updated On :31 மே 2013, 6:41 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி எல்.வி.வசுமித்ரா 496 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ளார்.

மாணவி எல்.வி.வசுமித்ரா பெற்றுள்ள மதிப்பெண்கள் விபரம்: தமிழ்- 97, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-100, சமூகஅறிவியல்-100. மொத்த மதிப்பெண்கள்- 496. சிதம்பரம் அருகே உள்ள அம்மாபேட்டை மருதமுத்து நகரில் வசிக்கும் மாணவி வசுமித்ராவின் தந்தை எல்.சரவணன் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கக கண்காணிப்பாளராக பணியாற்றுகிறார். தாயார்  ஆர்.புனிதா நி்ர்மலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியையாக உள்ளார். இவரகளது மகள் எல்.வி.வசுமித்ரா, மகன் தீபக்ராஜ் 2-ம் வகுப்பு படிக்கிறார். மாநில அளவில் மூன்றாமிடம் பெற்று சாதனை படைத்த மாணவி எல்.வி.வசுமித்ராவிற்கு, பள்ளி முதல்வர் மேரி இனிப்பு வழங்கி பாராட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.