எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

விபத்தில் உதவி தலைமை ஆசிரியர் சாவு

ஆண்டிபட்டி அருகே முத்தனம்பட்டி கள்ளர் சீரமைப்புத் துறை மேல்நிலைப் பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் முனைவர்.வனராஜா இதயகீதன்(52).

Updated On :7 நவம்பர் 2013, 2:55 pm

தேனி அருகே திருமலாபுரம் விலக்கு பகுதியில் வியாழக்கிழமை இரண்டு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் முத்தனம்பட்டி கள்ளர் சீரமைப்புத் துறை மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் உயிரிழந்தார்.

ஆண்டிபட்டி அருகே முத்தனம்பட்டி கள்ளர் சீரமைப்புத் துறை மேல்நிலைப் பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் முனைவர்.வனராஜா இதயகீதன்(52). கள்ளர் சீரமைத்துறை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்டத் தலைவராகவும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.

        முத்தனம்பட்டியில் இருந்து தேனி நோக்கி இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வனராஜா இதயகீதன், திருமலாபுரம் விலக்கு பகுதியில் எதிர்புறம் இருந்து வந்த கார், இரண்டு சக்கர வாகனம் மீது மோதியதில் காயமடைந்தார்.

 தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து க.விலக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.