போலி முகவரியில் 110 நபர்களுக்கு பாஸ்போர்ட்: வீடு வீடாக சிபிஐ சோதனை
திருவாரூர் மாவட்டத்தில் 110 நபர்களுக்கு தொடர்பில்லாத முகவரி கொண்டு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுலக ஊழியர்கள் ரவி,


திருவாரூர் மாவட்டத்தில் 110 நபர்களுக்கு தொடர்பில்லாத முகவரி கொண்டு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுலக ஊழியர்கள் ரவி, அசோக் மற்றும் சப்-இஸ்பெக்டர் உள்ளிட்ட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம் மகாதேவபட்டினம், உள்ளிகோட்டை, கீழதிருப்பாலகுடி, மேல்திருப்பாலகுடி ஆகிய பகுதிகளில் பாஸ்போர்ட் வழங்கப்பட்ட 110 முகவரியயும் மனோகரன் தலைமையிலான சிபிஐ போலீஸார் வீடு வீடாக சென்று ஆய்வு செய்தனர். இதில் அனைத்துமே போலியானது என்று கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...